சென்னை: “தமிழ்நாடு என்றாலே சாதனை… சாதனை. சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். முதல் 3 ஆண்டுகளில் அடித்தளம் அமைத்து, 2 ஆண்டுகளில் இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனை செய்துள்ளோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் முதலமைச்சரின் பதிவில்; “தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை!
திராவிட மாடல் தனித்துவமான மாடல்!
சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்!
முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!
இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி!
நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்!” எனவும் தெரிவித்துள்ளார்.
