×

கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீடு வேண்டும் திருநங்கைகளுக்கான மசோதாவுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற நிலைக்குழுவில் புகார் அளிக்க முடிவு

விழுப்புரம்: திருநங்கைகளுக்கான மசோதாவை 15 நாளில் அவசர அவசரமாக கையெழுத்திட்டு நிறைவேற்றி உள்ளதற்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற நிலைக்குழுவினை சந்தித்து புகார் அளிக்க உள்ளோம் என்று திருநங்கைகள் தெரிவித்து உள்ளனர். விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதுகுறித்து விழுப்புரத்தில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவர் அருணா, செயலாளர் கங்கம்மாள், இணை செயலாளர் சுபிக்‌ஷா, விழுப்புரம் மாவட்ட தலைவர் விமலாநாயக், செயலாளர் ரூபினி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவுக்காக இந்தாண்டு ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் வந்துள்ளனர்.

சென்னையில் இயங்கும் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கூவாகம் திருவிழா 2026 என்ற திருநங்கைகள் விழாவை நடத்துகிறோம். முதலில் கல்வி, வேலை வாய்ப்பில் சாதித்த திருநங்கைகளின் அணிவகுப்பு நிகழ்வும், பிறகு மிஸ் கூவாகம் 2026 அழகிப்போட்டியும், தொடர்ந்து நடனம், நாட்டியம், கலைநிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர்.

2026ம் ஆண்டு திருநங்கைகளுக்கான மசோதாவை 15 நாளில் அவசர அவசரமாக கையெழுத்திட்டு நிறைவேற்றி உள்ளனர். இதில் கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீடு சிலவற்றை சேர்க்க வேண்டும். இதுகுறித்து திருவிழா முடிந்ததும் நாடாளுமன்ற நிலைக்குழுவினை சந்தித்து புகார் அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Villupuram ,
× RELATED சொந்த ஊர்களில் சட்டசபை தேர்தலுக்கு...