×

பேடிஎம் வங்கி உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கடந்த , 2017-ல் தொடங்கப்பட்டது. 2024-25 நிதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கையின்படி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் 3 கோடி வங்கிக் கணக்குகளும், 1 கோடிக்கும் அதிகமான கேஒய்சி விதிமுறைகளுக்கு இணங்கிய வாடிக்கையாளர்களும், 30 கோடிக்கும் அதிகமான வாலட் பயனர்களும் இருந்தனர்.

மேலும், இது 80 லட்சத்துக்கும் அதிகமான பாஸ்டேக்குகளை வழங்கிய மிகப்பெரிய நிறுவனமாகவும் இருந்தது. கேஒய்சி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத நிதி நடவடிக்கைகள் குறித்த கவலைகள் உள்ளிட்ட தொடர்ச்சியான விதிமீறல்கள் காரணமாக, சிக்கலில் மாட்டி கொண்டது. இந்திலையில், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு வழங்கப்பட்ட வங்கி உரிமத்தை ரத்து செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நேற்று அறிவித்தது.

இதன் மூலம், பல ஆண்டுகளாக நீடித்த ஒழுங்குமுறைச் சிக்கல்கள் மற்றும் தொடர்ச்சியான விதிமீறல்களைத் தொடர்ந்து, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி எந்தவொரு வங்கி வணிகத்தையும் நடத்துவதற்கு அதிகாரப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. வங்கியின் செயல்பாடுகள், வங்கி மற்றும் அதன் வைப்பாளர்களின் நலன்களுக்குப் பாதகமான வகையில் நடத்தப்பட்டதால் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Tags : Paytm Bank ,Reserve Bank of India ,Mumbai ,Paytm Payments Bank ,
× RELATED 2025-26 நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலைகள்...