×

தாமஸ் கோப்பை பேட்மின்டன் கனடாவை வீழ்த்திய இந்தியா: ஆயுஷ் ஷெட்டி, ஸ்ரீகாந்த் அபாரம்

ஹார்சன்ஸ்: தாமஸ் கோப்பை பேட்மின்டன் போட்டியில் நேற்று, இந்தியா, 4-1 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தியது. தாமஸ் கோப்பை பேட்மின்டன் போட்டிகள், டென்மார்க்கின் ஹார்சன்ஸ் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் இந்தியா, கனடாவை எதிர்கொண்டது. இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென், கனடாவின் விக்டர் லாய் உடன் மோதிய முதல் போட்டியில் 21-18, 19-21, 10-21 என்ற செட் கணக்கில் லக்சயா சென் தோல்வியை தழுவினார்.

இருப்பினும், அடுத்து நடந்த ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, கனடாவின் பிரையன் யாங்கை, 21-13, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடி, போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தார். அதன் பின் நடந்த ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி இணையும், அம்சகருணன், அர்ஜுன் இணையும் சிறப்பாக ஆடி, கனடா இரட்டையர் இணைகளை தோற்கடித்தனர். கடைசியாக நடந்த ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, கனடாவின் ஜோசுவா நுகுயெனை, 21-17, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றிவாகை சூடினார். அதனால், 4-1 என்ற கணக்கில் இந்தியா, கனடாவை வீழ்த்தியது.

Tags : Thomas Cup badminton ,India ,Canada ,Aayush Shetty ,Srikanth ,Horsnes ,Horsnes, Denmark ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத் அணிக்கு...