சென்னை: தங்கம் விலை நேற்று மேலும் பவுனுக்கு ரூ.480 குறைந்தது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் சரிந்தது. அட்சய திருதியையான கடந்த 19ம் தேதி அன்று தமிழகத்தில் நகைக்கடைகளில் தங்கத்தின் விற்பனை அமோகமாக இருந்தது. தங்கம் விலை கடந்த ஆண்டை காட்டிலும் அதிரடியாக உயர்ந்து இருந்த நிலையிலும், நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அட்சய திருதியை முடிந்தமும் தங்கம் விலை குறைய தொடங்கியது. 20ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14400க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 21ம் தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் பவுன் ரூ.1 லட்சத்து 14,400க்கு விற்கப்பட்டது.
தொடர்ந்து 22ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. அதன் பிறகு நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.14160க்கும், பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13,280க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை குறைந்தது. நேற்றைய தினம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.14,100க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12800க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.265க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.2.65 லட்சத்துக்கும் விற்பனையானது.
