×

வாக்கு சாவடிகளுக்குள் போலீசார் நுழைய கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு

சென்னை: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இடையே தேர்தல் அலுவலரின் அனுமதியின்றி வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது என்று தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பணிகளில் உள்ள காவலர்கள் எக்காரணம் கொண்டும் வாக்குச் சாவடி மையங்களுக்குள் நுழைய கூடாது என்று தமிழக டிஜிபி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

தேர்தல் பணியில் இருக்கும் காவலர்கள் அனைவரும் வாக்குசாவடியின் வெளிக்கதவு அருகே நின்று தங்களது பணியை செய்ய வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

வாக்குசாவடிகளில் வலை ஒளிபரப்பு (லைவ் ஸ்ட்ரீமிங்) செய்யப்படுவதால் விதி மீறும் காவலர்கள் உடனடியாக கண்டறியப்படுவார்கள் என்றும் எச்சரித்து உள்ளார். தமிழக டிஜிபி-யின் இந்த அதிரடி உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் வயர்லெஸ் கருவி மூலம் தொடர்ந்து அறிவுறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் எந்த ஒரு வாக்குசாவடியிலும் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்யவும் தமிழக டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் மண்டல ஐ.ஜி-க்கள் மற்றும் சரக டி.ஐ.ஜி-க்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். பின்பற்ற அறிவுறுத்தப்பட்டிருக்கும் விதிமுறைகளில் இருந்து ஏதேனும் மீறல் அல்லது கவனக்குறைவு ஏற்பட்டால், கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்ட்டு உள்ளது.

Tags : Tamil Nadu ,DGP ,Chennai ,Sandeep Roy Rathore ,
× RELATED தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும்...