தஞ்சாவூர், ஏப்.22: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், தஞ்சையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் பிரசாரம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் நேற்று முதல் 23ம் தேதி வரை மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
