×

முத்துப்பேட்டையில் 19 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

 

முத்துப்பேட்டை,ஏப்.22: முத்துப்பேட்டையில் 19 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டது. இதனால் நீண்ட நாளான குடிநீர் தட்டுப்பாட்டை அரசு சரி செய்துள்ளது. இதற்காக பொதுமக்கள் அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
முத்துப்பேட்டையில் உள்ள அரசு துறை கட்டிடங்கள் பெரும்பாலும் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இதில் ஏற்கனவே பேரூராட்சி அலுவலகம் கட்டிடம், சார்பதிவாளர் கட்டிடம், அரசு மருத்துவமனை கட்டிடம், உழவர் சந்தை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு துறை கட்டிடங்கள் அரசு பள்ளிகள் கட்டிடங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. அதன் பின்னர் கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் பல கோடி மதிப்பிலான அரசு பள்ளி கட்டிடங்கள், பாலங்கள் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் நூலக கட்டிடங்கள் கட்டித் திறக்கப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது.

Tags : Muthupettai ,DMK ,
× RELATED போலீசை கண்டதும் மணல் திருடர்கள் ஓட்டம்