×

அட்சய திருதியை முன்னிட்டு ராஜகோபால சுவாமி கோயிலில் பெருமாள் தங்க கருட சேவை

 

மன்னார்குடி,ஏப்.22: மன்னார்குடியில் தமிழகத்தில் புகழ் பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ராஜகோபால சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திதி அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை நாளில் எது வாங்கினாலும் அது பன்மடங்காக வளரும் என்பது ஐதீகம். பத்ம புராணத்தில் விஷ்ணு பகவான் நாரத மகரிஷியிடம் இந்த நாளில் செய்யப்படும் செயல்கள் பலனளிக்கும். அவற்றின் விளைவுகள் ஒரு போதும் குறையாது என்றார்.

Tags : Golden Garuda Seva ,Rajagopala Swamy Temple ,Akshaya Tritiya ,Mannargudi ,Tamil Nadu ,
× RELATED போலீசை கண்டதும் மணல் திருடர்கள் ஓட்டம்