×

பெரம்பூர் வேட்பாளர் ஆர்.டி.சேகருக்கு பிரசாரம்; பாஜகவுடன் விஜய் மறைமுக கூட்டணி: தொல்.திருமாவளவன் பேச்சு

பெரம்பூர்: முக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்எம்பி நேற்று மாலை வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் பிரசாரம் செய்தார். ப்போது அவர் பேசியதாவது; ரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிருக்கிறது என்று தெரிந்தும் ஆர்.டி.சேகரை ஏன் மு.க.ஸ்டாலின் வேட்பாளராக அறிவித்துள்ளார் என்றால் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கை.நமது வேட்பாளர் ஆர்.டி.சேகரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும். இந்த தொகுதியில் அதிமுக தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது. அதனால்தான் கூட்டணிக்கு தொகுதியை கொடுத்து பாமக இங்கு நின்றுள்ளது.

விஜய்க்கு இந்த தொகுதியில் வெற்றி இல்லை என்றுதான் 2 தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அவரின் தொடர் பிரசாரம் திமுக ஆட்சியில் இருந்து நீக்கவேண்டும், திமுக வெற்றி பெறக்கூடாது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக கூடாது, அரசியல் எதிரி திமுக. கொள்கை எதிரி பாஜக என்று கூறும் விஜய், இதுவரை பாஜக மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளாரா? அரசியல் என்றால் கொள்கை தானே, இவை இரண்டும் ஒன்று என்று அவருக்கு சொல்லி கொடுப்பவர்கள் சொல்லி கொடுக்கவில்லை. அவருக்கு திமுகவை எதிர்ப்பு மட்டும் தான் கொள்கை. பாஜகவுடன் அதிமுக நேரடி கூட்டணி என்றால், விஜய் மறைமுக கூட்டணி, திமுகவின் வாக்கை பிரிக்க வேண்டும் என்பது விஜய்யின் நோக்கம். பாஜகவில் அத்தனை வேட்பாளர்கள் இருந்தாலும் ஒரு கிருத்துவரும், இஸ்லாமியரும் இருக்கமாட்டார்கள். பெரம்பூரில் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். உடனே ஜோசப் விஜய் என்று பெயர் கேட்டவுடன் வாக்கு அளித்து விடுவார்களா என்ன?

பாஜக சிறுபான்மை மக்களை வழிபாடு செய்யவிடாமல் தடுத்தது, தேவாலயங்களை இடித்தது, பைபிளை எரித்தது, திருவள்ளுவருக்கு, பெரியாருக்கு அவமரியாதை செய்த இயக்கம் தான் பாஜக. விஜய் திமுக எதிர்ப்பு தவிர, மக்களுக்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளேன், இந்த பகுதியில் குடிநீர் வசதி சிறந்தமுறையில் செயல்படுத்த உள்ளேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளேன், மகளிர் மேம்பட இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளேன் என்று ஏதாவது ஒரு வாக்குறுதியை அளித்துள்ளாரா? நான் வருவேன் நான் வருவேன் என்று மட்டும்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார். எனவே மக்கள் சிந்தித்து திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.

Tags : Perambur ,R. D. ,Sekar ,Vijay ,BJP ,Allawan ,PERAMPUR ,DIMUKA ,LED SECULAR PROGRESSIVE ALLIANCE ,R. D. Tol ,Liberation Leopards Party ,Segar ,ThirumavalavanMP ,Viasarpadi Mulla Nagar ,Rambur ,
× RELATED சட்டம், ஒழுங்கு பற்றி பேச எடப்பாடிக்கு அருகதை இல்லை: முத்தரசன் காட்டம்