×

ஜாதி பெயரை குறிப்பிட்டு பிரசாரம் திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்கு

திண்டுக்கல்: ண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். அவர் தனது ஆதரவாளர்களுடன் கடந்த ஏப். 10ம் தேதி முள்ளிப்பாடி ஊராட்சிக்குட்பட்ட கோடாங்கிநாயக்கன்பட்டியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, அந்த ஊரில் பெருபான்மையான குறிப்பிட்ட ஜாதியின் பெயரை குறிப்பிட்டு பிரசாரம் செய்தார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், திண்டுக்கல் சீனிவாசன் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, ஜாதி பெயரை குறிப்பிட்டு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறி, வேல்முருகன் என்பவர் திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பி.என்.எஸ். 196(1) பிரிவின் கீழ் போலீசார் திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Dindigul Srinivasan ,Dindigul ,AIADMK ,Kodangi Nayakkanpatti ,Mullipadi ,
× RELATED சட்டம், ஒழுங்கு பற்றி பேச எடப்பாடிக்கு அருகதை இல்லை: முத்தரசன் காட்டம்