- டைகர் எடப்பாடி
- ஒலிபெருக்கி பழனிசாமி
- பி. சிதம்பரம் நையாண்டி
- காரைக்குடி
- முன்னாள்
- மத்திய நிதி அமைச்சர்
- பி. சிதம்பரம்
- காரைக்குடி, வாகங்கா மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தில்லி
காரைக்குடி: வகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்றிரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: ரசியல் சாசன திருத்த மசோதாவை தோற்கடித்துள்ளோம். டெஸ்ட் மேட்சில் தமிழ்நாடு டெல்லியை தோற்கடித்துள்ளது. இரண்டு ஆண்டுகள் அரசியல் சாசனத்தில் கை வைக்காத நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கை வைக்க துணிச்சல் வந்துள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் தேர்தல் நடப்பதால் 68 எம்.பிகள் வரமாட்டார்கள் என துணிச்சலுடன் இந்த மசோதாவை கொண்டு வர முயன்றனர். ஆனால் 68 எம்.பிகளும் ஆஜராகி இந்த மசோதாவை தோற்கடித்துள்ளனர். நமது இன்றைய பிரதிநிதித்துவம் 24.3 என்ற அளவில் உள்ளது. இந்த திருத்தம் நிறைவேறி இருந்தால் 5 மாநிலங்களுக்கு நமது பிரதிநிதித்துவம் 20.7 ஆக குறைந்து இருக்கும். இது எனக்கு தெரிந்த கணக்கு.
ஆனால் நமது கணக்கு புலி எடப்பாடி பழனிசாமி அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டால் 7.18 என்ற பிரதிநிதித்துவம் 7.23 என உயரும் என கூறியுள்ளார். அரசியல் சாசன திருத்தம் பாதகமா, இல்லையா என கேட்டால் எடப்பாடியிடம் கேட்டால் அமித்ஷா பாதகம் இல்லை என்று கூறுவதால் நானும் அப்படி சொல்கிறேன் என்கிறார். அப்படி என்றால் எடப்படி பழனிசாமிக்கு, ‘ஒலிபெருக்கி பழனிசாமி’ என பெயர் வைக்கலாம். 80 தொகுதிகளில் தவெக வேட்பாளர்களுக்கு சுவடே இல்லை. அவர்கள் தோல்வியடைவார்கள். தமிழ்நாட்டில் மக்கள், பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். வ்வாறு அவர் பேசினார்.
