- விஜய்
- பழல்.கருப்பைய பாலர்
- மதுரை
- மதுரை மேற்கு சட்டமன்றம்
- அஇஅதிமுக
- செலூர் ராஜு
- பழல்.கருப்பையா
- Vilangudi
மதுரை: மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூவை ஆதரித்து, விளாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பழ.கருப்பையா பிரசாரம் செய்து பேசியதாவது: விஜய்யை பாருங்கள். அவர் ஒரு கோமாளி. அவருக்கு அரசியலும் தெரியாது. எதுவும் தெரியாது. செய்தித்தாள் படிக்கிற பழக்கமே விஜய்க்கு கிடையாது.
நடிகர் என்பதால் மட்டும்தான் இவருக்கு கூட்டம் கூடுகிறது என்பதை தவிர, இவருக்கு ஒன்றுமே தெரியாது. 234 வேட்பாளர்களில் தற்போது ஒரு வேட்பாளர் வீட்டுக்கே போய்விட்டார். ஒரு சில தொகுதியில் மட்டும், இவரது கட்சியில் நிற்பவர்கள் சில ஓட்டுகளை பெறலாம். அவ்வளவுதான். விஜய்யிடம் நாட்டை முன்னேற்றுவதற்கான எந்த ஒரு அரசியல் தரமும் கிடையாது. திறமும் கிடையாது. போட்டியில் திமுக – அதிமுக மட்டும்தான் என்றார்.
