×

தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.1.23 கோடி பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் தகவல்!

 

தூத்துக்குடி: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.5,62, 282 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று (17.4.2026) வரை பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்கள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கம்: ரூ.1 கோடியே 23 லட்சத்து 518. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு: ரூ.16 லட்சத்து 12 ஆயிரத்து 162. பறிமுதல் செய்யப்பட்ட மது பானங்களின் மதிப்பு: ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்து 282.

தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்கவும், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கவும் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Tuthukudi district ,Thoothukudi ,Tamil Assembly elections ,Tamil Nadu Assembly elections ,
× RELATED தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்க...