×

ஸ்மார்ட் காவலர் செயலியை பயன்படுத்தி இரவு ரோந்து பணியினை தவறாமல் பதிவிட்ட காவலர்

பெரம்பலூர், ஏப். 18: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரபாகர் “ஸ்மார்ட் காவலர் (Smart Kavalar)” செயலியை சிறந்த முறையில் பயன் படுத்தி, இரவு ரோந்து தணிக்கை பணிகளை தவறாமல் பதிவிட்டுள்ள மங்களமேடு காவலரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரபாகர் நேற்று பணியின் போது “ஸ்மார்ட் காவலர் (Smart Kavalar)” செயலியை முழுமையாக பயன்படுத்தி இரவு ரோந்து தணிக்கையில், காவல் பணிகளை பதிவு செய்த மங்களமேடு காவல் நிலைய முதல் நிலை காவலர் வெங்கடேசன் (Gr I -1093) என்பவரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது, தொழில்நுட்ப வசதிகளை முழுமையாக பயன்படுத்தி காவல் பணிகளை மேம்படுத்தும் முயற்சியில் காவலர்கள் ஈடுபடவேண்டும். “ஸ்மார்ட் காவலர்” செயலியை அனைவரும் திறம்பட பயன்படுத்தி, குற்றத் தடுப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பில் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். மற்ற காவலர்களும் இதனை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஏடிஎஸ்பி (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) (பொறுப்பு தலைமையிடம்) பாலமுருகன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகபிரியா ஆகியோரும் உடனிருந்தனர்.

 

Tags : Perambalur ,Perambalur District ,SP Prabhakar ,Perambalur… ,
× RELATED சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்ரீராமகிருஷ்ணா பப்ளிக் பள்ளி சாதனை