டெல்லி: தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தது உச்ச நீதிமன்றம். இது அரசின் கொள்கை சார்ந்த விஷயம், இதில் நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும், வேண்டுமென்றே வாக்களிக்காமல் இருப்பவர்களுக்கு அரசு நலத் திட்டங்களைப் பெறுவதில் இருந்து தடை விதிக்கும் வகையில் வழிகாட்டுதலை வெளியிடத் தேர்தல் ஆணையத்து உத்தரவிடக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
