சென்னை: தங்கம் விலை நேற்று மேலும் பவுனுக்கு ரூ.320 உயர்ந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த 14ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 13,760க்கு விற்பனை ஆனது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,320க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14,560க்கு விற்பனையானது.
வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.275க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.75 லட்சத்துக்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது. நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,360க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14,880க்கு விற்றது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.275க்கும், பார் வெள்ளி ரூ.2.75 லட்சத்துக்கும் விற்றது.
