மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்க போகிறது – நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

டெல்லி: மகளிர் இடஓதுக்கீடு மசோதா நம் நாட்டிற்கு ஒருபுதிய திசையை காட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருக்கிறார். 131-ஆவது சட்ட திருத்தம், தொகுதி மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு மசோதாக்களை ஆதரித்து நாடாளுமன்ற மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, அதிமுக்கியத்துவம் வாய்ந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்பதை தாம் பாக்கியமாக கருத்துவதாக கூறினார்.

இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 மசோதாக்களும் எனது அரசு, நாட்டின் வளர்ச்சியில் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை பறைசாற்றும். இன்று மசோதாக்களை எதிர்ப்பவர்கள் நாளை இதற்கான எதிர்வினையை சந்திப்பார்கள் என்றார். புதிய வரலாறு படைக்க நாடாளுமன்றத்திற்கு பொன்னான நாள் என்றார். மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்த கட்சிகளை பெண்கள் தண்டித்து உள்ளனர். இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வரலாறு நம்மை நினைவு கொள்ளும்.

நம் நாட்டின் மக்கள் தொகையில் சரி பாதி உள்ளவர்களுக்கு உரிய பிரதிநித்துவம் வழங்கும் தருணம் இது. எனவே மசோதாக்களை அரசியல் பிரச்சனையாக பார்க்க வேண்டாம், , அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது ஒரு கட்சிக்கு மட்டுமே பெருமை கிடைக்கும் விவகாரம் அல்ல, நாட்டின் மக்கள் தொகையில் 50% உள்ளவர்கள் தாக்களுக்கான உரிமையை பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது. நாட்டை கட்டமைப்பதில் இனி பெண்களின் பங்கு அதிகம் இருக்கும். மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை எதிர்ப்போரை காலம் ஒருபோதும் மன்னிக்காது. 30 ஆண்டுகளில் ஏராளமான பெண்கள் தலைவர்களாகி உள்ளனர். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்பது காலத்தின் கட்டாயமாகும். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெண்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பஞ்சாயத்துக்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உள்ள நிலையில், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னணியில் உள்ளனர் என்றார். பெண்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை தடுக்க நாம் யார்.! பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கிடைத்தால் நாடு மேலும் வலிமை பெறும்.

அரசியலமைப்பால் தான் நாட்டின் பிரதமராக இன்று என்னால் நாடாளுமன்றத்தில் நிற்க முடிகிறது என்றார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, எந்த மாநிலத்திற்கும் பாரபட்சம் காட்டப்படாது என்று உறுதியளிப்பதாக குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள மாநிலங்களின் விகிதாச்சார பிரதிநிதித்துவம் மகளிர் இட ஒதுக்கீட்டால் குறையாது என்று பேசினார். பிரதமர் பேசபேச எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்ட நிலையில், மேலும் தொகுதி மறுவரையறை மூலம் தென்மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது. தொகுதி மறுவரையறை குறித்து மாநிலங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிப்பார் என்றார் பிரதமர்.

Related Stories: