×

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.83 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி, ஏப். 14: தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.83 லட்சம் ரொக்கப்பணம், தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு உட்பட்ட 6 தொகுதிகளிலும் 24 மணி நேரமும் 54 பறக்கும் படை குழு, 54 நிலையான கண்காணிப்பு குழுவினர் தேர்தல் நடத்தை விதிமீறலை தடுக்கவும், பணம், பரிசு பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதாக ரூ.83,03,266 ரொக்கப் பணம், ரூ.13,71,671 மதிப்பிலான இலவச பொருட்கள், ரூ.5,44,499 மதிப்பிலான மதுபானங்கள், ரூ.8,74,390 மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், ரூ.3,43,000 மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்கள் என மொத்தம் ரூ.1,14,36,826 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விஷூ மகாஜன் தெரிவித்து உள்ளார்.

Tags : Thoothukudi district ,Thoothukudi ,Election Monitoring Team ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...