- லெனினிஸ்ட்
- திமுக
- Kulachal
- மாநில செயலாளர்
- மார்க்சிச லெனினிஸ்ட்
- சிவப்புக் கொடி
- கட்சி
- கல்யாணசுந்தரம்
- அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக அரசு
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு…
குளச்சல்,ஏப்.14: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (செங்கொடி) கட்சியின் மாநில செயலாளர் கல்யாணசுந்தரம் குளச்சலில் நிருபர்களிடம் கூறியதாவது, திமுக தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சுமார் 7 கோடி தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கல்விக்கு ரூ.48 ஆயிரத்து 543 கோடி ஒதுக்கி உள்ளது. ஆனால் சுமார் 140 கோடி இந்திய மக்களுக்கு மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.அரசு கல்விக்கு ஒதுக்கியது ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் ஆகும். பா.ஜ அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
பா.ஜ. ஆட்சி செய்கின்ற மாநிலங்களிலிருந்து கூலி தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு இடம் பெயர்கிறார்கள். அவர்களையும் தமிழக அரசும், மக்களும் நேசக்கரம் கொண்டு வரவேற்கின்றனர். ஒன்றிய பா.ஜ அரசு தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் இரண்டாம் தர குடிமக்களாக கருதுகிறது. வரி பகிர்வில் பா.ஜ. ஆட்சி செய்கின்ற மாநிலங்களுக்கு அதிக பணத்தை வாரி இறைக்கிறது.இவற்றை எதிர்க்க வேண்டிய அதிமுக ஒன்றிய பா.ஜ. ஆட்சியாளர்களுக்கு அடிமையாக இருக்கிறது. பா.ஜ, அதிமுக கட்சிகளை தேர்தலில் தோற்கடிக்க லெனினிஸ்ட் செங்கொடி கட்சி தி.மு.க.தலைமையிலான மார்க்சிஸ்ட் மற்றும் காங்.கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வது முடிவு செய்துள்ளது என்றார். அப்போது மாவட்ட செயலாளர் வக்கீல் பால்ராஜ், நிர்வாகிகள் தனபால், மேரி ஸ்டெல்லா,அமலா, ராஜபாய்,லாயம் சுசீலா,மரிய செல்வன்,கனி மத்திக்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் ரீத்தம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
