×

குளச்சல் பஸ் நிலையத்தில் நேர குறிப்பாளர் இல்லாததால் அவதி

குளச்சல்,ஏப்.14: குளச்சல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரூ, மதுரை, வேளாங்கண்ணி, திருநெல்வேலி,தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில், மார்த்தாண்டம், களியக்காவிளை, குலசேகரம், திற்பரப்பு, மணக்குடி, நீரோடி,ஆலஞ்சி,பாலப்பள்ளம் ஆகிய உள்ளூர் பகுதிகளுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து நிலையத்தினுள் வந்து செல்லும் அனைத்து அரசு பேருந்து நடத்துனர்களும், நேரக் குறிப்பாளர் அலுவலகம் சென்று குறித்த நேரத்தில் குறிப்பிட்ட தடம் பேருந்துகளை இயக்குவர். பேரூந்து நிலையத்தில் பஸ் ஏற வரும் பயணிகளும் சமய குறிப்பாளரிடம் பேருந்து வரும் நேரம் கேட்டறிவர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த சமயம் குறிப்பாளர் அலுவலகத்தில் சமயம் குறிப்பாளர் இன்றி காணப்படுகிறது. நடத்துனர்களே குறிப்பு ஏட்டில் நேரத்தை குறித்து விட்டு பேருந்துகளை இயக்குகின்றனர். வெளியூர் பயணிகள் தங்கள் ஊருக்கு செல்லும் பேருந்து வரும் நேரத்தை அறிய முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி குளச்சல் பேருந்து நிலைய போக்குவரத்து அலுவலகத்தில் சமய குறிப்பாளரை உடனே நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : Kulachal ,station ,Kulachal Kamaraj ,Chennai ,Bangalore ,Madurai ,Velankanni ,Tirunelveli ,Thoothukudi ,Nagercoil ,Marthandam ,Kaliyakavilai ,Kulasekaram ,Thirparappu ,Manakkudi ,Neerodi ,Alanji ,Palapallam ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...