×

பழநியில்

பழநி, ஏப். 14: பழநியில் சாலையில் வீசப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பழநி புறநசர் சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலை மற்றும் பெரியப்பா நகர்- கோதைமங்கலம் சாலையகங் கட்டிட கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் அதிகளவு கொட்டப்படுகின்றன. இரவு நேரங்களில் சாலையோரங்களில் மூட்டை மூட்டையாக கொட்டி விட்டு செல்கின்றனர். இதனை உண்பதற்காக அப்பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் இறைச்சி கழிவுகளை சாலை முழுவதும் சிதறடிக்கின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்படுகின்றன.

இதுதவிர, இறைச்சி கழிவுகளை உண்ண சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இச்சாலைகளில் இறைச்சி கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டக்கூடாதென உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையின் சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைகக்ப்பட்டுள்ளன. எனினும், இறைச்சி கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டும் நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொண்டு இறைச்சி கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Palani ,Palani Sivagiripatti Bypass Road ,Periappa Nagar-Gothamangalam Road ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...