×

டூவீலர் விபத்தில் சிறுவன் பலி

நத்தம், ஏப். 14: நத்தம் அருகே சின்ன மலையூரை சேர்ந்தவர் சத்யா (17). இவர் தனது நண்பர் சந்தோஷ் (18) என்பவருடன் டூவீலரில் பின்னால் அமர்ந்து நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குமரபட்டி மேம்பால பகுதியில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சாலையோர தடுப்பு சுவரில் பலமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்தோஷ் தலையில் படுகாயமடைந்த நிலையில் மதுரை ஜிஹெச்சில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Natham ,Sathya ,Chinnamalaiyur ,Santosh ,Kumarapatti Mempala ,Madurai National Highway… ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...