மதுரை, ஏப்.14: தமிழகம், புதுச்சேரியில் தற்போது வறண்ட வானிலை நிலவிவருகிறது. அதன் காரணமாக வெப்பநிலை இயல்பில் இருந்து 2-3 டிகிரி செல்சியசும், ஒரு சில இடங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்துள்ளது. சில இடங்களில் இயல்பை ஒட்டியும் இருந்தது. அதன் தொடர்ச்சியாக கரூர், வேலூர், ஈரோடு மாவட்டங்களில் நேற்று 105 டிகிரி வெயில் கொளுத்தியது. நாமக்கல், மதுரை, தர்மபுரி, கோவை மாவட்டங்களில் 102 டிகிரி, திருச்சி, சேலம், பாளையங்கோட்டை 100 டிகிரி வெயில் நிலவியது.
