×

மீனாட்சி கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்

தமிழ்ப்புத்தாண்டு இன்று (ஏப்.14) பிறப்பதையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றில் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். இதனால் கோயில்களில் அவர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பக்தர்களுக்கு தேவையான பிரசாதம் குறைவின்றி கிடைக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர். மீனாட்சியம்மன் மற்றும் கள்ளழகர் கோயில்களில், நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பக்தர்களுக்கு அறுசுவை உணவு வகைகள் அன்னதானமாக வழங்க தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

Tags : Meenakshi ,Temple ,Tamil Nadu ,Madurai Meenakshi Amman Temple ,Sundararaja Perumal Temple ,Ahagargo ,Swami ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...