×

சிவகங்கை தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை பிரசாரத்தில் கருணாஸ் பேச்சு

சிவகங்கை, ஏப்.14: சிவகங்கை அருகே அரசனிகீழமேடு, டி.புதூர், காமராஜர் காலனி, காஞ்சிரங்கால், அரசனிப்பட்டி, இலந்தங்கடிப்பட்டி, ஒ.புதூர், சோழபுரம், பெருமாள்பட்டி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருணாஸ் பொது மக்களிடம் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது: இப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர், ரேசன் கடை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளை செய்வேன். தற்போதைய எம்எல்ஏ இந்த தொகுதி வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை. இவர் ஏற்கனவே எம்பியாகயும் 5 ஆண்டுகள் இருந்துள்ளார். அப்போதும் தொகுதி வளர்ச்சிக்கு எந்தவிதமான திட்டங்களையும் செய்யவில்லை. இந்த அரசு மக்கள் நலத்திட்டங்கள் ஏராளமானவற்றை செய்துள்ளது.

அனைத்து திட்டங்களையும் ஒவ்வொருவரும் பயனடையும் வகையில் கொண்டு வந்து சேர்ப்பேன். சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த வளர்ச்சியடைந்த தொகுதியாக சிவகங்கை தொகுதி மாறும். இப்பகுதியில் உள்ள ஏராளமானவர்கள் வெளிநாடுகள், வெளியூர்களில் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். வானம் பார்த்த பூமியான, பின் தங்கிய பகுதியான சிவகங்கையில் படித்த இளைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர். இனி வரும் காலங்களில் இப்பகுதியிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் செயல் திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு பேசினார். உடன் சிவகங்கை திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானிகணேசன் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் பொதுமக்கள் இருந்தனர்.

Tags : Karunas ,Sivaganga ,Secular Progressive Alliance ,Arasanikeezhamedu ,D.Pudhur ,Kamaraj Colony ,Kanchirangal ,Arasanippatti ,Ilanthangadipatti ,O.Pudhur ,Cholapuram ,Perumalpatti ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...