×

சப்போட்டா பழ கேசரி

தேவையானவை:

சப்போட்டா பழம் – 8 (விழுதாக அரைத்தது)
சர்க்கரை – ½ கப்
ரவை- ¼ கப்
பால் – ¼ கப்
நெய் – ¼ கப்
முந்திரி, பாதாம், பிஸ்தா – ½ கப் (நெய்யில் வறுத்துப் பொடித்தது).

செய்முறை:

ஒரு நான்ஸ்டிக் தவாவில் கொஞ்சம் நெய்விட்டு ரவையை வறுத்து, பின் சர்க்கரை, பால், சப்போட்டா விழுதுச் சேர்த்து, நன்கு கலக்கி சிறு தீயில் மூடி வைக்கவும். 10 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும். கலவைச் சுண்டி சுருள ஆரம்பித்ததும் நெய், வறுத்த நட்ஸ்கள் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சப்போட்டா பழ கேசரி தயார்.

Tags :
× RELATED அரிசி பாயசம்