×

திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துமுதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரசாரம்; ராணிப்பேட்டை அருகே நடக்கிறது

ராணிப்பேட்டை, ஏப்.13: திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ராணிப்பேட்டை அருகே பிரசாரம் மேற்கொள்கிறார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் ராணிப்பேட்டையில் திமுக வேட்பாளர் ஆர்.காந்தி, ஆற்காடு தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அரக்கோணத்தில் திமுக கூட்டணியில் விசிக வேட்பாளர் எழில் கரோலின், சோளிங்கர் தொகுதியில் கூட்டணி கட்சி சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எம்.முனிரத்தினம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.இந்நிலையில் 5ம் கட்ட பிரசாரமாக இன்று (13ம் தேதி) காலை திருவள்ளூரிலும், இன்று மாலை ராணிப்பேட்டை மாவட்டத்திலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களையும் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (13ம் தேதி) பிரசாரம் செய்ய உள்ளார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் அம்மூர் ரோடு பகுதியில் உள்ள மைதானத்தில் அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை 7 மணியளவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.இதற்கான ஏற்பாடுகளை நேற்று ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், திமுக வேட்பாளருமான அமைச்சர் ஆர்.காந்தி பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை நேற்று 2வது நாளாக ஆய்வு செய்தார். முதல்வர் வருகையையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் எஸ்.பி. சிபின் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,DMK ,Ranipet ,Arakkonam ,Sholingar ,Arcot ,Ranipet… ,
× RELATED கணினி குலுக்கல் முறையில்...