×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழப்பு: உறவினர்கள் திடீர் மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஏப். 13: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி வாகனம் மோதி 4ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது தொடர்பாக, உறவினர்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்தவர் அழகர். மின் தொழிலாளரான இவரது மகன் யோகதர்ஷன்(9). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வகுப்புகள் முடிந்த பிறகு, மாணவன் பள்ளிக்கு சொந்தமான வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். பெருமாள்தேவன்பட்டியில் இறங்கிய யோகதர்ஷன், வாகனத்தின் முன்பக்கமாக நடந்து சென்றுள்ளார். இதனை கவனிக்காமல் டிரைவர் இயக்கிய பள்ளி வாகனம் மாணவன் மீதுமோதியது.

இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த வன்னியம்பட்டி போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளி வாகனத்தின் டிரைவரான வன்னியம்பட்டி பகுதியைச் சேர்ந்த சடையாண்டி(47) மீது, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : SRIVILLIPUTHUR ,Srivilliputur ,Perumaldevanpatty ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...