காரியாபட்டி, ஏப். 13: காரியாபட்டி அருகே நூற்பாலையில் இருந்துதொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். காரியாபட்டி அருகே உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், வாடகை வேனில் சொந்த ஊருக்கு திரும்பிச்செல்வது வழக்கம். இதன்படி நேற்று வேலை முடிந்த பிறகு பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு நூற்பாலையில் இருந்து புறப்பட்டுச்சென்ற வேன், காரியாபட்டியில் உள்ள நரிக்குடி சாலை மந்திரி ஓடை என்ற பகுதியில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த விஜயகலா, முத்துலதா, அங்காள ஈஸ்வரி, மீனா ஆகிய 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். வேன் டிரைவர் மது போதையில் இருந்ததாகவும், இதனால் அதிவேகமாக ஓட்டியதில் விபத்து ஏற்பட்டது என்றும், காயமடைந்த பெண்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்த ஆவியூர் போலீசார் வேன் டிரைவர் சுந்தரங்குண்டு பிரவீன் என்பவர் மீது னவழக்குப் பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.
