திண்டுக்கல், ஏப்.13: சென்னையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், பழநியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சென்னையிலிருந்து சொகுசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்த பஸ்சில், நகைப்பட்டறை தொழிலாளியான திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் நடேசன் (39), என்பவரும் திண்டுக்கல்லுக்கு பயணித்துள்ளார். அப்போது பஸ்ஸில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம், நடேசன் ஆபாசமாக பேசியதுடன், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், சொகுசு பஸ் திண்டுக்கல் வந்ததும் இறங்கிச்சென்று நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் டவுன் டி.எஸ்.பி கார்த்திக் மேற்பார்வையில், நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, எஸ்ஐ சூரியகலா ஆகியோர் வழக்குப்பதிந்து, நடேசனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
