- வருணநாடு
- ரஞ்சித் சிங்
- வெள்ளிமலை வெள்ளிமலை துரைசாமி மரகதம் தொடக்கப்பள்ளி
- வெள்ளிமலை துரைசாமி மரகதம் தொடக்கப்பள்ளி
- கடமலை- மயிலாய்
- ஆண்டிப்பட்டி
வருசநாடு, ஏப்.13: வருசநாடு அருகே வெள்ளிமலை வெள்ளிமலை துரைச்சாமி மரகதம் ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் ரஞ்சித் சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளிமலை துரைச்சாமி மரகதம் ஆரம்பப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியான இங்கு ஐந்து வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வாக்குச்சாவடி மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் குறைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை உடனடியாக சரி செய்ய அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். இந்த ஆய்வின் போது, உதவி வன அலுவலர் புவனேஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன், வட்டாட்சியர் ஜாஹிர் உசேன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
