- Mangudi
- சட்டமன்ற உறுப்பினர்
- காரைக்குடி
- திமுக
- காங்கிரஸ்
- எஸ். மங்குடி எம்.எல்.ஏ.
- காரைக்குடி மாநகராட்சி
- மத்திய அமைச்சர்…
காரைக்குடி, ஏப்.13: காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 29,30, 32, 31, 34, 35, 36 ஆகிய வார்டுகளில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் எஸ்.மாங்குடி எம்எல்ஏ வாக்குகள் சேகரித்து பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு பெற்ற வேட்பாளராக, ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வழிகாட்டுதலுடன், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், கார்த்தி ப சிதம்பரம் எம்.பி ஆகியோரின் ஆசியுடன் இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
சட்டமன்றத்தில் பேசி நம் தொகுதிக்கு நம் பகுதிக்கு தேவையான பல்வேறு நிரந்தர திட்டங்கள் பெற்று கொடுத்துள்ளோம். சட்டக்கல்லூரி, வேளாண் கல்லூரி, இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற ஐ.டி பார்க் என்ற பல்வேறு நிரந்தர திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று எதிர்காலத்தில் பல்வேறு அரசின் திட்டங்களை நம் பகுதிக்கு தருவேன் என்ற உறுதியையும் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போது மேடையில் அறிவித்தார்.
மருத்துவ காப்பீடு ரூ.10 லட்சம் வரை பயனடையலாம் என்பது உள்பட ஒவ்வொன்றாக ஆராய்ந்து முதல்வர் திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த திட்டங்கள் கிடைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும். அதற்கு இத்தொகுதியில் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். முன்னதாக மாநகராட்சி மேயர் (பொ) நா.குணசேகரன் வரவேற்றார். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள், திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
