மதுரை, ஏப். 13: மதுரை தபால்தந்தி நகரை சேர்ந்தவர் கீதா (52). இவர் மகாத்மாகாந்தி நகரில் உள்ள ஒரு கோயிலுக்கு சாமி கும்பிட செல்வது வழக்கம். அங்கு கடந்த ஏப்.4ம் தேதி மாலையில் சென்று சாமி கும்பிட்டு கொண்டிருந்தார். அருகில் உள்ள விளக்கு தீ இவரது சேலையில் பற்றி எரிந்தது.
இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீதா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
