×

மதுரையில் போலீஸ் கொடி அணி வகுப்பு

மதுரை, ஏப். 13: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் அடங்கிய கொடி அணிவகுப்புகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி மதுரை, கீரைத்துரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வில்லாபுரம் ஆர்ச் பகுதியிலிருந்து நேற்று போலீஸ் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. இதேபோல் கே.புதூர் பகுதியிலும் அணிவகுப்பு நடைபெற்றது. புதூர் பஸ்ஸ்டாண்டில் துவங்கி மாதா கோயில் ரோடு வழியாக மூன்றுமாவடியில் அணிவகுப்பு நிறைவு பெற்றது.

 

Tags : Madurai ,Tamil Nadu Assembly elections ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...