மதுரை, ஏப். 13: மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (35). இவர் வேறு ஒரு பகுதியில் உள்ள ஒரு 17 வயது சிறுமியை கடந்த ஜூன் மாதம் திருமணம் முடித்துள்ளார். பின்னர் இந்த விஷயம் வெளியில் தெரியவந்ததால் இதுகுறித்து சிறுமியின் தந்தை அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
