×

விபத்தில் தொழிலாளி பலி

நத்தம், ஏப். 13: நத்தம் அருகே வத்திபட்டி கேகே நகரைச் சேர்ந்தவர் லெட்சுமணன் (28). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 3ம் தேதி மதுரைக்கு தனது டூவீலரில் வேலைக்கு சென்று விட்டு மதுரை – துவரங்குறிச்சி சாலையில் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பரளி பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சாலையில் கவிழ்ந்தது.

இதில் படுகாயமடைந்த லெட்சுமணன் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிசிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லெட்சுமணன் நேற்று உயிரிழந்தார். விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Natham ,Letshumanan ,Vathipatti KK Nagar ,Madurai ,Madurai-Thuvarankurichi road… ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...