- கொடைக்கானல் நீதிமன்றம்
- மாவட்டம்
- கொடைக்கானல்
- மாவட்ட நீதிபதி
- முத்துசாரதா
- பழனி
- முதன்மை இணை
- நீதிபதி
- ரேணுகாதேவி
கொடைக்கானல், ஏப். 13: கொடைக்கானல் நீதிமன்ற வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. மாவட்ட நீதிபதி முத்து சாரதா புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில் பழநி முதன்மை சார்பு நீதிபதி ரேணுகாதேவி, மாவட்ட உரிமை இயல் மற்றும் குற்றவியல் நடுவர் அருண் பாண்டியன், குற்றவியல் நீதித்துறை நடுவர் திஷோ நந்த், கொடைக்கானல் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து மாவட்ட நீதிபதி கூறுகையில், ‘‘கொடைக்கானல் நீதிமன்ற வளாகம் அணுகுதிறன், சேர்க்கை மற்றும் புதுமையின் ஒரு முன்மாதிரியாக உருவெடுத்துள்ளது. இது ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதியை நெருக்கமாக கொண்டு சேர்த்து, மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு ஒரு உயரிய தரநிலையை நிர்ணயித்துள்ளது’’ என்றார்.
