×

துண்டு பிரசுரம் விநியோகித்து பிரச்சாரம் மாரியம்மன் கோயில் பகுதி வளர்ச்சியடைய பிரதமரிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன்

தஞ்சாவூர், ஏப். 13: தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியில் நேற்று வாகனத்தில் சென்றபடி கட்சி நிர்வாகிகளுடன் கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் மற்றும் பொதுமக்களிடம் பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் அவர், வாக்காளர்கள் மத்தியில் பேசும்போது, நம் தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகம் வந்து செல்கின்றனர்.

இந்த பகுதியில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரியாக இல்லை. அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் இப்பகுதியில் வர்த்தகம் செய்து வரும் வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் இடையூறுகள் இல்லாமல் அதற்கான நடவடிக்கை எடுப்பேன். மாரியம்மன் கோயில் பகுதி முழுவதும் வளர்ச்சி அடைய பிரதமரிடம் பேசி அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

இப்பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளுக்காக பொதுமக்களுடன் சேர்ந்து பல்வேறு போராட்டங்களையும் இந்த பகுதியில் நடத்தி உள்ளேன். நான் மத்திய மந்திரிகளுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் எந்த கோரிக்கையாக இருந்தாலும் நேரடியாக பேசி தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதிக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவேன். இவ்வாறு பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வாக்குறுதி அளித்து பேசினார்.

 

Tags : Mariamman Temple ,Thanjavur ,BJP ,Karuppu Muruganandam ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...