×

திருவிடைமருதூரில் ஏகல் அபியான் ஒன்றியகுழு பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம்

தஞ்சாவூர், ஏப். 12: தஞ்சாவூர் மாவட்டம் ஏகல் அபியான் ஒன்றியக்குழு பொறுப்பாளர்களின் சந்திப்பு கூட்டம் திருவிடைமருதூரில் நடந்தது. மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். சமிதிகளின் பொறுப்பு, ஆசிரியர்கள் கடமை குறித்து பேசினார். தென் மாநில துணை தலைவர் அசோக்குமார் ஏகல் அபியான் குறித்த விளக்கம் அளித்தார். தென்னிந்திய கார்யாலய பொறுப்பாளர் கார்த்திகேயன் ஏகலின் செயல்பாடு முறைகளையும், சமிதிகளின் நடைமுறைகள் குறித்து பேசினார்.

சமிதி அமைப்பு முறைகளை பற்றி மாநில பொறுப்பாளர் பூங்கோதை அறிவித்தார். திருப்பனந்தாள், காமாட்சிபுரம், பந்தநல்லூர், திருமங்கலக்குடி, நாச்சியார்கோவில், பாபநாசம், கபிஸ்தலம் ஏழு பகுதிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் விஜயராகவலு வரவேற்றார். நிறைவாக வாசுகி நன்றி கூறினார்.

 

 

Tags : Egal Abhiyan Union Committee ,Thiruvidaimarudur ,Thanjavur ,Bhaskar ,South State ,Vice President ,Ashok Kumar Egal… ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...