×

பேராவூரணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி முகாம்

பேராவூரணி, ஏப். 13: பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா பள்ளியில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026ஐ முன்னிட்டு, பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு நிலை அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு, பேராவூரணி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், முத்திரைத்தாள் கட்டண தனித்துணை கலெக்டருமான கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள பேராவூரணி தொகுதிக்குட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர். காலை மற்றும் மாலையில் நடைபெற்ற பயிற்சியில் 950 க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் மற்றும் பி1, பி2, பி3 நிலைகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி முகாமை உதவி கலெக்டர் (பயிற்சி) கார்த்திக் ராஜா பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், பேராவூரணி தாசில்தாருமான பாலசுப்பிரமணியன், கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியன், தேர்தல் துணை சுரேஷ் சுரேஷ், மற்றும் வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் கலந்து கொண்டனர்.

 

 

Tags : Peravoorani ,Tamil Nadu Assembly Elections 2026 ,Assembly ,Dr. ,J.C. Kumarappa School ,Peravoorani Constituency ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...