×

கறம்பக்குடி அருகே முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கறம்பக்குடி, ஏப்.13: கறம்பக்குடி அருகே எம் தெற்குதெரு முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே எம் தெற்கு தெரு ஊராட்சி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்து பெற்ற முத்து மாரியம்மன் கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த 3 நாட்களாக சிறப்பு பூஜைகள் நடைபெற்று.

அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது பின்னர் பக்தர்களுக்கு புனித நீரும் தெளிக்க பட்டது. சிறப்பு அபிஷேக ஆராதனை கள் நடைபெற்று அறுசுவை அன்னதானமும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் எம் தெற்கு தெரு கிராமத்தை சுற்றியுள்ள 20க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

Tags : Muthu Mariamman Temple ,Karambakudi ,M Daksha Street Panchayat ,Pudukkottai district ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...