கந்தர்வகோட்டை, ஏப்.13: கந்தர்வகோட்டை தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் அலுவலகர்களுக்கு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் கந்தர்வகோட்டை, குளத்தூர் கறம்பக்குடி தாலுக்காவை சேர்த்த வாக்குசாவடி நிலை அலுவலர்கள், வாக்குசாவடி மேற்பார்வையாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் கிராம உதவியாளர்களுக்கு கந்தர்வகோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவி தலைமையில் வட்டாச்சியர் பரணி முன்னிலையில் வீடியோ கேமாரா,
பி.ஆர்.ஓ. ஆப், பூத் சிலிப், வாக்குசாவடி அமைந்தல் போன்ற விபரங்கள் குறிந்து சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கறம்பக்குடி வட்டாச்சியர், குளத்தூர் வட்டாச்சியர், தேர்தல் துணை வட்டாச்சியர்கள், வருவாய் ஆய்வளர்கள், வாக்குசாவடி நிலை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியளார்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்ட 250 நபர்கள் கலந்துகொண்டு விபரம் அறிந்தனர்.
