ஜெயங்கொண்டம் ஏப். 13: ஜெயங்கொண்டம் பகுதியில் நேற்று வாக்காளர் வாக்காளர் தகவல் சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. அரியலூர் மாவட்டத்திலுள்ள 2 சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த மார்ச் 15ம்தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தது. பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்பு குழுவினரும் அன்று முதல் 24 மணி நேர தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 30ம்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 6ம் தேதி முடிவுற்றது.
அதன் பின்னர் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, உரிய ஆவணங்கள் இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மனுக்கள் வாபஸ் பெறும் நாள் முடிந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வேட்பாளர் பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் அச்சடிக்கும் பணி நடைபெற்று உள்ளது. இன்று முதல் வாக்கு பதிவு எந்திரத்தில் பேலட் பேப்பர் பொருத்தும் பணி தொடங்கும் என தெரிகிறது.
இந்நிலையில் வாக்காளர்களுக்கான பூத் சிலிப் வழங்கும் பணிக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு தாயார் செய்யப்பட்டது. இதன்படி நேற்று முதல் உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பாகம் எண் 175, 176-ல் வாக்காளர் தகவல் சீட்டு வீடுவீடாக வழங்கப்பட்டது.
