×

தா.பழூர் வேளாண் சுற்று வட்டாரத்தில் குறுவை பட்டம் நடவு சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள்

தா.பழூர், ஏப். 13: அரியலூர் மாவட்டம் தா.பழூர் வேளாண் சுற்று வட்டாரத்தில் சம்பா நடவு முடிவுற்ற நிலையில், விவசாயிகள் மும்முனை மின்சாரம் மூலம் தண்ணீர் இறைத்து குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தா.பழூர் வட்டாரத்தில் குறுவை, சம்பா, சித்திரை கார் எனும் நவரைப் பட்டம் என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இடங்கண்ணி, தென்கச்சி பெருமாள் நத்தம், அண்ணங்காரன்பேட்டை, குடிகாடு, காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, கூத்தங்குடி ,அருள்மொழி, முத்துவாஞ்சேரி, ஸ்ரீ புரிந்தான், கோடாலிகருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி துவங்கி உள்ளனர்.

சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் அதிகரித்து காணப்பட்டது. நாற்றாங்காள் தயார் செய்து நேரடி நெல் விதைப்பு செய்து. இயந்திரங்கள் மூலமும் ஆட்கள் மூலமும் நடவு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த குறுவை பட்டம் குறுகிய கால நெல் ரகங்களை தேர்வு செய்து விவசாயிகள் விதைப்பு செய்துள்ளனர். சென்ற சம்பா பருவத்தில் சரியான நேரத்தில் மழை இல்லாத காரணமாக சரியான விளைச்சல் இல்லாத நிலையில் இந்த போகம் விளைச்சல் நன்றாக வரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் வெயில் மற்றும் மழை என மாறி மாறி சூழ்நிலைகள் இருக்கும் நேரத்தினால் வேளாண்மை துறை சார்பில் தண்ணீரை முழுவதும் வயல்களில் தேக்கி வைக்காமல் பாய்ச்சலும் காய்ச்சலும் என்ற முறையில் தண்ணீரை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் பயிர்கள் இழப்பின்றி நல்ல மகசூல் பெற முடியும் என குருவை நடவு தொழில்நுட்பங்கள் வழங்கி உள்ளனர். இதனை கடைபிடித்து விவசாயிகள் விவசாயம் விவசாய பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

 

Tags : Kuruvai ,Tha.Pazhur ,Samba ,Ariyalur district ,Chithirai ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...