ராஜபாளையம் ஏப்.12: ராஜபாளையம் தொகுதி புத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தோட்டக்கலைத் துறை சார்பில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 100% முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோலம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் முத்துலட்சுமி, தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் (நடவு பொருள்) நசீமா மற்றும் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர்கள், மகளிர் குழுக்கள், ஊராட்சி மன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
