×

உசிலம்பட்டி தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பு: முன்னாள் எம்எல்ஏ அய்யப்பன் தீவிரம்

உசிலம்பட்டி, ஏப். 12: உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில், சசிகலா தலைமையிலான அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், முன்னாள் எம்எல்ஏ அய்யப்பன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தொகுதியில் உள்ள செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களுக்கு சென்று, நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்பகுதிகளில் பொதுமக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

இதன்படி பன்னினான் கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கி அவர், அந்த கிராமத்திற்கு குடிநீர் வசதி கழுங்கப்பட்டி வரை புதிய தார்ச்சாலை அமைத்தது உள்ளிட்ட பல்வேறு பணிகளை எம்எல்ஏவாக இருந்து செய்து கொடுத்ததை கூறி வாக்கு சேகரித்தார். பின்னர் கண்ணனூர், கருமாத்தூர், கோவிலாங்குளம் உள்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் பிரசாரம் மேற்கொண்டார்.

பொதுமக்களிடம் பேசும்போது, அந்தந்த கிராமங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக நூலகங்கள், விளையாட்டு மைதானம், குடிநீர் வசதி, மயானச் சாலை மற்றும் தண்ணீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்திருப்பதை எடுத்துக்கூறி, முன்னாள் எம்எல்ஏ அய்யப்பன் பிரசாரம் செய்தார். அவருடன் பன்னியான் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காசி, கட்சி நிர்வாகிகள் ஜெயராமன் ஜான்சன் கோஷ்மின், சசிகுமார், பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Tags : Former ,MLA Ayyappan ,Usilampatti ,All India ,Makkal Munnetra Kazhagam ,Sasikala ,Chellampatti ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...