×

சிறுபான்மையினர் காவலனான திமுக அரசு தொடர வேண்டும் அமைச்சர் பி.மூர்த்தி வேண்டுகோள்

மதுரை, ஏப். 12: தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக விளங்கும் திமுக அரசு தொடர்ந்திட உதயசூரியின் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என, அமைச்சர் பி.மூர்த்தி வேண்டுகோள் விடுத்தார். மதுரை கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் வடக்கு மாவட்ட செயலாளர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, திருப்பாலை பகுதி வாசு நகரில் உள்ள பள்ளிவாசல் அருகே உதயசூரியன் சின்னத்திற்கு நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், ‘‘தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டின் உரிமையையும் பாதுகாப்பதில் முக்கியத்துவம் கொடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர வேண்டும். இதற்கு அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.

இந்த பிரச்சாரத்தின் போது பகுதி செயலாளர் சசிகுமார், முன்னாள் மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், சிறுபான்மை நல உரிமைப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் மீராஜான், வட்டட் செயலாளர்கள் திருப்பாலை ராமமூர்த்தி, லட்சுமணன் உள்ளிட்ட திரளான திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

Tags : Minister ,P. Murthy ,DMK government ,Madurai ,Minister P. Murthy ,Tamil Nadu ,Udayasuri ,Madurai East ,DMK ,North District Secretary ,Vangaivari ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...