- தெய்பிராய்
- அஷ்டமி
- காலபைரவா
- நத்தம், அய்யம்பாளையம்
- நத்தம்
- பட்டிவீரன்பட்டி
- கைலாசநாதர்
- பங்கூனி மாதம்
- கால பைரவர்...
நத்தம்/ பட்டிவீரன்பட்டி, ஏப். 12: நத்தம் கைலாசநாதர் கோயிலில் உள்ள கால பைரவர் சன்னதியில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி கால பைரவருக்கு பால், பழம், இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் உள்பட 16 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் கால பைரவருக்கு பல்வேறு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முன்னதாக மூலவர் கைலாசநாதர், செண்பகவல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. இதில் நத்தம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். பூஜை முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் ராஜராஜ சோழீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
முன்னதாக காலபைரவருக்கு 16 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பட்டிவீரன்பட்டி சாவடி பஜாரில் அமைந்துள்ள கால பைரவர் சன்னதி, அண்ணா நகர் ஜோதி லிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள சொர்ண ஆகர்ஷன பைரவர் சன்னதியிலும் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் நடந்தன.
