×

ஒரத்தநாடு அருகே சாலை விபத்து

ஒரத்தநாடு, ஏப்.12: ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள் மீது, பள்ளி வேன் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் இளைஞர் உயிரிழந்தார். தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாதுரை மகன் பாண்டி (20) கரந்தை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பிரபாகரன் (21) நண்பர்களான இருவரும், கடந்த ஏப்6ம் தேதி ஒரத்தநாடு அருகே பாப்பாநாட்டில் உள்ள மற்றொரு நண்பர் நிரஞ்சன் (19) என்பவர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர், மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் அன்று மாலை தஞ்சாவூர் நோக்கி வந்தனர்.

அப்போது தென்னமநாடு ஆர்ச் அருகே வந்து கொண்டிருந்தபோது, தனியார் பள்ளி வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், மூவரும் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் தலையில் படு காயமடைந்த பாண்டி, பிரபாகரன் ஆகியோர் உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த நிரஞ்சன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

 

Tags : Orathanadu ,Pandi ,Appadurai ,Palliyakraharam ,Thanjavur ,Prabhakaran ,Ramalingam ,Karanthai ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...